Thursday, January 20, 2011

நாடார்


தமிழ்நாட்டில் நாடார் சமுதாயத்தினர் குறிப்பிடக்கூடிய எண்ணிக்கையில் 

உள்ளனர். திருநெல்வேலி,இராமநாதபுரம்விருதுநகர் தூத்துக்குடி மற்றும் 

கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் இவர்கள் பெரும்பான்மையினர்.

 மேலும், மதுரைதேனி,சேலம்கோவைதஞ்சாவூர்ஆற்காடுசெங்கல்பட்டு

சென்னைபோன்ற மாவட்டங்களிலும் இவர்கள் பல தொழில்களிலும் 

துறைகளிலும் ஈடுபட்டுள்ளனர். நாடார் சமுதாயத்தில் சுமார் 60% இந்துக்கள், 

எஞ்சியோர் கிறித்தவர்கள். ஆங்காங்கே ஒருசிலர் இஸ்லாம் சமயத்தைத் 

தழுவியதாகக் கூறப்படுகிறது. இந்து சமயத்தோடு பல விதங்களில் 

இணைந்திருந்தாலும் அதிலிருந்து சில கொள்கைகளில் மாறுபடுகின்ற 

அய்யாவழி சமயத்தைப் பின்பற்றுவோர் பெரும்பாலும் நாடார் 

சமூகத்தவரே.திருநெல்வேலி,தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி 

மாவட்டத்தில் கிறித்துவ சமயத்தைப் பின்பற்றும் நாடார்கள் அதிகம் 

உள்ளனர்

பெயர் மாற்றம்

ஒருசிலர் கருத்துப்படி, நாடான் (நாடார்) என்னும் சொல் நாடாள்வார் என்னும்

 பொருளுடைத்தது. ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக்

 கணக்கில் நாடார் சமுதாயத்தினர் சாணார் (Shanar/Chanar) என்று 


குறிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து

 (1910) இச்சமுதாயத்தினர் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறைக்கு

 மனுக் கொடுத்து, தங்கள் பெயரை நாடார் என மாற்றிக் கொண்டனர். ஆயினும்

, 2001இல் எடுக்கப்பட்ட தமிழ் நாட்டு மக்கள் தொகைப் பட்டியலில் எண் 74இன்

கீழ் நாடார், சாணார், கிராமணி என்னும் மூன்று பெயர்கள் இணைத்தே 

காட்டப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் என உள்ளனர். மேலும், தமிழ் நாடு அரசு

 வெளியிட்ட பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் அவ்வாறே உள்ளது.


.


நாடார் என்ற சொல் நாடாள்வார் என்ற சொல்லின் திரிபாகும். நாட்டை ஆள்பவர்கள் என்று பொருள்படும் இச்சொல் காலப்போக்கில் நாடாவார், நாடவார், நாடார் எனத் திரிந்துள்ளது. இதற்கான சில ஆதாரங்களாகக் கி.பி. என்று பொருள்படும் இச்சொல் காலப்போக்கில் நாடாவார், நாடவார், நாடார் எனத் திரிந்துள்ளது. இதற்கான சில ஆதாரங்களாகக் கி.பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி வட்டம் வடகாடு கோயிலூர் கல்வெட்டு (Annual Report on Epigraphy 191/1908, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1978ஆம் ஆண்டில் பதிப்பித்த திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் தொடர் எண் 198, வரி 253), கி.பி. 1507ஆம் ஆண்டைச் சேர்ந்த நாகர்கோவில் ஆதிமூல விநாயகர் கோயில் கல்வெட்டு (Travancore State Manual, திவான் பேஷ்கர் நாகமையா) மற்றும் கி.பி. 1644ஆம் ஆண்டைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் மடத்து அச்சம்பாடு கல்வெட்டு (வரலாறு இதழ் 9-10, பக்கம் 5-10, 1999-2000, இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையம், திருச்சி - 17) ஆகியவற்றைக் காட்டமுடியும்.

மேற்குறித்த நாகர்கோவில், மடத்து அச்சம்பாடு கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் நாடாள்வார் குடும்பங்கள் இன்றைக்கும் நாடான் என்ற பட்டத்துடன் உள்ளன. நாடாள்வான், நாடான் என்ற பட்டங்கள் ஒன்றுக்குப் பிரதியாக மற்றொன்று பயன்படுத்தப்பட்டதற்கு 19ஆம் நூற்றாண்டு வரையிலான பல கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. எனவே, நாடார்கள் என்ற பட்டத்தை இச்சமூகத்தவர் அண்மைக் காலத்தில்தான் பயன்படுத்தத் தொடங்கினர் என்பது முற்றிலும் தவறான கருத்தாகும்.

மேலும், சாணார்கள் என்ற சொற்பிரயோகம் காலகாலமாக இழிவானதாகக் கருதப்பட்டது என்ற செய்தியும் தவறானதாகும். சான்றோர் அல்லது சான்றார் என்ற சாதிப்பெயர் பேச்சு வழக்கில் சாணார் எனத் திரிந்தது என்பதற்கு இலக்கிய ஆதாரங்களும், கல்வெட்டு ஆதாரங்களும் உள்ளன. சான்றாண்மை என்ற பண்பு அனைத்து வகை நற்குணங்களையும் ஆளும் தன்மை என்று திருக்குறள் உரையாசிரியர்களால் பொருள்படுத்தப்பட்டுள்ளது. வீரயுகப் பண்புகள் மிகுந்திருந்த சங்க காலத்தில் நாட்டை ஆண்ட தலைமக்கள் அறப்போர் முறையில் பயிற்சி பெற்றுத் தேர்ந்த உயர் வர்க்கப் போர்வீரர்களாக இருந்தனர்; அவர்கள் சான்றோர்கள் என அழைக்கப்பட்டனர்.

அத்தகைய பயிற்சி பெற்ற அறப்போர் முறைக்குப் பெரியபுராணம் குறிப்பிடும் ஏனாதி நாதரின் போர் முறையை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஏனாதி நாதர் சான்றார் குலத்தவர் ஆவார். சான்றோர் சமூகத்தவரின் குலத் தொழில் என்பது அறப்போர் மரபு, போர்ப் பயிற்சி, நாட்டை ஆள்தல், வருவாய்க் கணக்கு பராமரித்தல், நீதி நிர்வாகம் போன்றவை ஆகும். இதற்கும் ஏனாதி நாதர் புராணத்தில் ஆதாரம் உள்ளது. கோகர்ணம் முதல் கன்னியாகுமரி வரை பெருமாள் ராஜாக்கள் காலத்தில் (கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரை) வழக்கிலிருந்த மூழிக்களக்கச்சம் என்ற நிர்வாக நடைமுறைச் சட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்தியவர்கள் சான்றார் குலத்தவரே ஆவர். கன்னியாகுமரி மாவட்டக் கல்வெட்டுகள் பலவற்றில் இதற்கான ஆதாரம் உள்ளது.

சான்றோர் சமூகப் போர்வீரர்களில் பனையேறிச் சான்றோர் என்ற பிரிவும் இருந்துள்ளது என்பது உண்மையே. இவர்கள் கள் இறக்கி நேரடியாகக் கொண்டு சென்று விற்றார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கள்விலைஞர்களாக வலையர் குலப் பெண்டிரையே இலக்கிய உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இக்குலத்தவருக்குப் பழையர் என்று பெயர். ("பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்" என்ற மலைபடுகடாம் வரி 459க்கான நச்சினார்க்கினியர் உரை, பக்கம் 650, பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், உ.வே.சா. நூலகப் பதிப்பு, 1974.) இந்தப் பனையேறிச் சான்றோர் பிரிவினர், போர்த் தொழில் தவிரப் பதநீர் இறக்குதல், கருப்புக்கட்டி காய்ச்சுதல் போன்றவற்றை உபதொழிலாகச் செய்திருக்கலாம். இவர்களில் சிலர் காலப்போக்கில் கள்ளிறக்கி விற்கும் தொழிலிலும் ஈடுபட்டிருக்க வேண்டும். எனவே, கள்ளிறக்கும் தொழிலில் சான்றார் சமூகத்தினர் நெடுங்காலமாக ஈடுபட்டு வந்திருக்கின்றனர் என்றோ, அந்த அடிப்படையிலேயே இழிவுபடுத்தப்பட்டனர் என்றோ கருதுவது மிகவும் தவறான ஒரு வாதமாகும்.

சாணார் என்ற சொல் இழிவாகக் கருதப்பட்டதற்கு என்ன காரணம்? சில சொற்கள் தொனிப்பொருளிலேயே பிறரால் இழிவாகக் கருதிப் பயன்படுத்தப்பட்டு இழிவுச் சுமையுடன் வழக்கில் நிலைத்து விடுவதுண்டு. காலப்போக்கில் இழிவுத் தொனிப்பொருள் அந்தச் சொல்லுக்குள் குடியேறிவிட்டது என்பதையும் குறிப்பிடுவதற்காகவே இதனை எழுதுகிறோம். அது போன்றதுதான், சாணார் என்ற வழக்கும். தென்மாவட்டங்களில் பல சாதியினரைப் பற்றிக் குறிப்பிடும்போது சாதிப் பெயரைக் குறிப்பிடாமல், சாதிக்குரிய உயர்வான பட்டப்பெயர் சொல்லியே குறிப்பிடுவது இன்றும் நடைமுறையில் உள்ளது. ஐயர்மார் என்று பிராமணர்களையும் குறிப்பிடுவதை இன்றும் வழக்கில் காணலாம். சாதிப் பெயரைச் சொல்வது அவ்வளவு உயர்வானதாகக் கருதப்படுவதில்லை. எனவே, சாணார் என்பதைவிட நாடாவார் (நாடார்) எனக் குறிப்பிடப்படுவதை இச் சாதியினர் ஏற்றனர்.


 

நாடார் என்ற சொல் நாடாள்வார் என்ற சொல்லின் திரிபாகும். நாட்டை ஆள்பவர்கள் .

தொழில்கள்

நாடார் சமூகத்தினருள் தென்மாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்கும் வடமாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்குமிடையே பழக்க வழக்கங்கள் மாறுபட்டுள்ளன. சிலர் விவசாயம், கட்டிடத்தொழில் செய்தனர். சிலருக்குச் சொந்த நிலம் இருந்தது. ஆனால் பலர் பனையேற்றுத் தொழில் செய்தனர். அவர்கள் பனை மரங்களிலிருந்து பதனீர், கள் இறக்குதல் மற்றும் அவைகளை விற்பனை செய்தல் போன்றவைகளுடன் பனை மரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வந்தனர். இன்று நாடார் சமூகத்தினர் தமிழகத்திலும் அதற்கு வெளியிலும் அனைத்து வகையான பொருட்களையும் விற்பனை செய்யும் வணிகர்களாக உள்ளனர். சிலர் நிலக்கிழார்களாகவும் வேறு சிலர் தொழிலதிபர்களாகவும் உள்ளனர். பிற சாதியினரைப் போலவே நாடார்களும் கல்வித்துறை, தொழில்நுட்பத்துறை, மருத்துவத்துறை, தகவல்துறை போன்ற பல தொழில்களில் ஈடுபட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

சமுதாயத்தினர் இன்றைய நிலை

இன்று தமிழ்நாட்டில் பொருளாதார வசதியுடையவர்களாக இச்சமூகத்தினர் முன்னேற்றமடைந்துள்ளனர். பல துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். மேலும் இவர்கள் அரசியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்துள்ளனர். தமிழகத்தில் இச்சமூகத்தைச் சேர்ந்த காமராசர் முதலமைச்சராக இருந்திருக்கிறார். இச்சாதியினரில் பலர் தமிழக அமைச்சரவையிலும் இந்திய அமைச்சரவையிலும் அமைச்சர்களாகப் பணியாற்றியிருக்கின்றனர்.
 முக்கியப் பிரமுகர்கள்
இந்த நாடார் சமுதாயத்தில் முக்கியப் போராட்டங்களின் மூலமும், அரசியல் பங்களிப்பின் மூலமும் சிறப்பு பெற்ற பலர் இருக்கின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கதாகச் சிலரைக் குறிப்பிடலாம்.

அய்யா வைகுண்டர்
நாடார் சமூகத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த முத்துக்குட்டி என்பவர். கேரளாவின் திருவிதாங்கூர்சமஸ்தானத்தில் நடந்த தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துப் போராடியவர். அய்யா வழி எனும் புதிய வழிபாட்டு முறையைக் கண்டறிந்து வழிகாட்டியவர்.
மார்ஷல் நேசமணி
1956 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தைக் கேரளாவோடு இணைக்க வேண்டும் என்ற நிலையில் போராடி அம்மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்கப் பாடுபட்டவர்.
காமராஜர்
ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போராடிய பல விடுதலைப் போராட்ட வீரர்களில் தமிழ்நாட்டில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காமராசரும் ஒருவர். இவர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்ததுடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி ஆகியோரை இந்திய அரசின் பிரதமராகக் கொண்டு வர முன் நின்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கே.டி.கோசல்ராம்
சுதந்திரப் போராட்ட தியாகியான இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு அணையை தன் சொந்த முயற்சியில் நாடார் சமூக மக்களிடமிருந்தும் வசூலித்து கட்ட வைத்த பெருமைக்குரியவர்.
பட்டிவீரன்பட்டி சௌந்தர பாண்டியன்
பொது இடங்களில் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கும் மற்றவர்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று போராடிய சிலருள் இவர் முக்கியமானவர். நாடார் சமூகத்திற்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று போராடி முதல் மேல்சபை உறுப்பினரானவர்.




கல்விப் பணி

தமிழ்நாட்டில் நாடார் சமுதாயத்தினர் ஆற்றி வரும் கல்விப்பணி அரியது. கிறித்துவ மத சார்புடைய அமைப்புகளுக்கு அடுத்ததாக நாடார் சமூகத்தினர் அதிக அளவில் கல்விக்கூடங்களை உருவாக்கியுள்ளனர். இந்த க் கல்விக்கூடங்களின் வாயிலாக தமிழகத்தில் சிறப்பான கல்விப்பணியாற்றும் நாடார் சமுதாயத்தின் பங்களிப்பு பெரிதும் போற்றக் கூடியது

No comments:

Post a Comment