இன்று இனிதாகட்டும்
எள்ளுக்குள் எண்ணை
நெல்லுக்குள் அரிசி
உழைப்புக்குள் வெற்றி
நல்லவற்றை கூட்டி
தீயவற்றை கழித்து
அன்பை பெருக்கி
வாழ்கையை இன்பமாக வகுத்து கொள்ளவும்
சிக்கனமே சேமிப்பின் முதற்படி
முயற்சியும் திறமையான உழைப்பும் வளமையைத் தரும் .
வலிமை என்பது உடல் உறுதியால் உண்டாகுவது அல்ல
மன உறுதியால் உண்டாகுவதாகும் .
உன் கடமையை செய் உன் உரிமை உன்னை தேடி வரும் .
விரைவில் உயர்வது பெரிதன்று ,எப்போதும் உயர்ந்தபடி இருப்பதே பெரிது .
வாங்கிய கடனும் தேங்கிய பணமும் வளர வளர வாழ்வைக் கெடுக்கும் .
வீழ்வது வெட்கமல்ல வீழ்ந்தே கிடப்பது தான் வெட்கமானது
பிரச்சினை ஒரு கதவை மூடினால் சந்தர்ப்பம் மறு கதவை திறக்கும்
வைரக்கல்லை தீட்டினால் ஒளி பிறக்கும் .
பிரச்சினைகளை எதிர் கொண்டால் வாழ்க்கை சிறக்கும் .
உழைப்பு வறுமையையும் தீமையையும் விரட்டுகிறது .
வளமையையும் நன்மையையும் சேர்க்கிறது .
சுரேஷ் OFFSET பிரிண்டர்ஸ்
ராஜேஷ் OFFSET பிரிண்டர்ஸ்
சென்னை
நாடார் சங்கம் கர்நாடகா இணைய தளத்திற்கு தெரிவித்தவர்
திரு தங்கதுரை அவர்கள்