Tuesday, February 22, 2011

சங்க செயற்குழு கூட்டம் 20.02.2011

சங்க செயற்குழு கூட்டம் 20.02.2011 மாலை நான்கு மணிக்கு திரு M.கோவிந்தன் ( நிதி ஆலோசகர் ஊரக வேலை வாய்ப்பு திட்டம் கிராம அபிவிருத்தி இலக்கா  ) தலைமை தாங்க துவங்கிற்று .

 நாடார் சங்க தலைவர் திரு T.துரைராஜ் நாடார் அனைவரையும் வரவேற்று பேசினார்கள் .பொருளாளர் திரு A.S.பிரகாஷ் வரவு திரு செலவு கணக்குகளை தெரிவித்தார்.

 திரு .M.கோவிந்தன் பேசும்போது சங்கத்தின் செயல்பாடுகளை மலர்ச்சியோடு செயல்படும் வாலிபர் கூட்டத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது உற்சாகமே வளர்ச்சியின் அடையாளம் என்று குறிப்பிட்டார். 

சங்கத்தில் திரு D. கோல்டன் அலெக்ஸ் புதிய உறுப்பினராக சேர்ந்தார் .

பொது செயலாளர் திரு S.K.முருகேஷ் புத்தாண்டு பரிசு கொடுக்க எடுத்த முயற்சியில் செயல்பட்ட அனைத்து உறுபினர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் அடுத்து நடத்த இருக்கும் இரத்த தான முகாமில் இதே உற்சாகத்தோடு பங்கு பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  அப்போது பல வாலிபர்கள் நாங்கள் கொடுக்கிறோம் என்று உற்சாக குரல் கொடுத்தார்கள் .

துணை தலைவர்கள் திரு P.சிசுபாலன் & திரு . P.நரேஷ்  பேசியதை  தொடர்ந்து பரிசுகள்   குலுக்கல்  முறையில்  எடுக்கப்பட்டு  நூறு  பேருக்கு  பரிசுகள் கொடுக்கப்பட்டது  .

முதல்  பரிசு  Fridge    திருமதி  . சாந்தி  லிங்கதுரைக்கும் 
இரண்டாம்  பரிசு 21" TV  A.O. Transport க்கும் 
மற்றும்  இதர  பரிசுகளும்  வழங்கப்பட்டது .

கூட்டத்தில் 150 பேருக்கும் அதிகமானோர் பங்கு பெற்றனர் .
திருவாளர்கள் A.செல்வராஜ் சுப்பிரமணி ,செல்வின்,செல்வகுமார்,சோமு,தங்கதுரை, செல்வதுரை , மணிமாறன்,பர்னபாஸ், திருமதி கமலா மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நிகழ்ச்சியை துணை செயலாளர் திரு I. சாம்ராஜ் ராபர்ட் தொகுத்து வழங்கினார் .

அனைவருக்கும் செல்லம் ஹோட்டல் காய்கறி புலாவ் வழங்கப்பட்டது 
     
   




























No comments:

Post a Comment